Skip to content
February 16, 2018 / apexprecitech

P 3-1 டாப் ஆர்ம் எவ்வாறு வேலை செய்கிறது ? அதன் எளிமையின் ரகசியம் என்ன ?


இருபதாண்டுகளுக்கும்  மேலாக Rieter மற்றும் LMW போன்ற நிறுவனங்களால் தயாரிக்கப்படும் நூற்பு இயந்திரங்களில்   காற்றழுத்த விசையால் இயங்கும் P  3- 1 டாப் ஆர்ம்கள் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன.

அவைகளின் எளிமை , சிக்கனம் மற்றும் தொழில் நுட்ப நேர்த்தி போன்றவற்றால் அவை இன்று வரை அப்படியே மாற்றப்படாமல் உள்ளன. இந்த டாப் ஆர்ம்களின் அமைப்பை தொடர்ந்து ஆராய்ந்து வந்த காரணத்தால் இதன் பல சிறப்பம்சங்கள்  விளங்க ஆரம்பித்தன. அவற்றை மாணவர்களோடும், ஆராய்ச்சியாளர்களோடும், தொழில் நுட்ப வல்லுனர்களோடும் பகிர்ந்து கொள்ளுகிறோம் .

டிராப்ட்டிங் விசைத்திறன் ஒரு சிறிய விளக்கம் 

ஒரு டாப்  ஆர்ம் டிராஃப்டிங் செய்யவதற்கான விசையை அளிப்பதற்கான கருவி. சாதாரணமாக ஒரு டாப் ஆர்மில் 50 கிலோ வரை விசை கொடுக்கும் வல்லமை இருக்கும். ஸபின்னிங்கில் முதல் உருளையில் (roller ) 16 கிலோவும், இரண்டாவது உருளையில் 12 கிலோவும், மூன்றாவது உருளையில்  16 கிலோவும் தேவை. (கூட்டினால் 44 கிலோ ). ஒரு உருளையில் 16 கிலோ என்றால் (படம் 1 பார்க்க ) அதன் இரண்டு புறங்களிலும் விசை சரிபாதியாக, அதாவது  8 கிலோவாக இருக்கும். இது அனைத்து உருளைகளுக்கும் பொருந்தும்.

 

P 3-1 டாப் ஆர்ம்கள் தனித்தனியாக ஒவ்வொரு உருளைக்கும் விசை அளிப்பதில்லை. அனைத்து டாப் ஆரம்களுக்கும் ஒரே நேரத்தில் காற்று புகுத்திய ரப்பர் குழாயின் குழைவுத்தன்மையின் (elasticity ) உதவியால் இந்தப் பெருவேலையை எளிதாக செய்கின்றன.

 p3-1-top-arm revised

மேலே டாப் ஆர்ம்களின் பிடி மைய  தண்டின் (arm bar ) குறுக்கு வெட்டுத் தோற்றம் உள்ளது. இதில் ” ப ” வடிவில் இருக்கும் நீளமான இரும்புத் தகடு (ledge) தான் காற்றுக் குழாயில் இருந்து விசையை டாப் ஆர்முக்கு கடத்துகிறது . எப்படி வெறும் 2.2 Kg / sq . cm அழுத்தமுள்ள காற்றால் , அதுவும் 32 மி மீட்டர் குறுக்களவே  கொண்ட அறுகோணக் குழாயில் ஒரு ஆர்முக்கு 50 கிலோ வீதம் 12 ஆரம்களுக்கு 600 கிலோ விசை அளிக்க முடிகிறது ? இதை சாத்தியமாக ஆக்கி இருக்கிறது இந்த டாப் ஆர்ம் .

இதன் காரணத்தினாலேயே , இதை ஒரு  சிறந்த வடிவமைப்புகளுள் ஒன்றாக நாம் வைக்க வேண்டும். ஆனால் இது இந்த ஆர்மின் பல சிறப்புகளில் ஒன்று மட்டுமே. இந்த ledge தகடு 135 மில்லி மீட்டர் நீளமும் 18 மில்லி மீட்டர் அகலமும் கொண்டது. இந்த குறுக்கு பரப்பான 135 X 18 = 2430  சதுர மில்லி மீட்டர் ( அல்லது 24.3 சதுர செ மீ ) பரப்பளவில் தான் ரப்பார் குழாய் தன விசையை செலுத்துகிறது.

காற்றின் விசை = 2.2 கிலோ / sq .cm

ledge பரப்பு         =  24.3 sq .cm

மேற்கண்ட  இரண்டையும் பெருக்கினால் அந்தந்த டாப் ஆர்ம்களில் கிடைக்கும் விசை கிடைத்து விடும். அதாவது 2.2 X  24.3 = 53.46 கிலோ. இப்பொழுது நாம் எப்படி ஏறக்குறைய 50 கிலோ டாப் ஆர்மில் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டோம்.

ஒருபுறம் ரப்பர் குழாயின் விசை . இன்னொரு புறம் மூன்று உருளைகளைத் தங்கி நிற்கும் டாப் ஆர்ம். இவை இரண்டுக்கும் இடையே தூதன் போல வேலை செய்வது ஒரு நெம்புகோல் (lever ). டாப் ஆர்மை நாம் அமுக்கும் போது , இந்த நெம்புகோல் மேல் நோக்கி தூக்கப் படுகிறது. அப்போது அது ரப்பர் குழாய் மேலிருக்கும் “ப ” வடிவ தகட்டை (ledge ) கீழ் நோக்கி அமுக்குகிறது. காற்று அடைக்கப் பட்ட குழாயை ledge எதிர்க்கையில் , குழாயின் முழு விசையும் நெம்புகோல் வழியாக டாப் ஆர்முக்கு செல்லுகிறது.

இத்துடன் வடிவமைப்பின் நேர்த்தி நிற்கவில்லை. டாப் ஆர்மில் கிடைத்த விசையை மூன்று உருளைகளுக்கும் பிரித்தளிக்கும் விதம் மிக்க நயம் மிகுந்தது. வெறும் இரண்டு சிறு கம்பித் துண்டுகளைக் (horizontal dowel  pins ) கொண்டு சரியான விகிதத்தில் ஒவ்வொரு உருளைக்கும் விசை செல்கிறது. மொத்த  விசையில் 1/3 பகுதி விசை பின் உருளைக்கும் , மீதி முதல் இரண்டு உருளைகளுக்கும் சேர்த்தும் அளிப்பது முதல் படி. இரண்டாவதாக , முதல் இரண்டு உருளைகளுக்கும் இடையே 60:40 விகிதத்தில் விசையை பிரிக்கிறார்கள். இதில் விகிதம் முன்பின் சரி செய்யவும்  அருகருகே உள்ள துளைகளில் கம்பியை மாற்றி செருகி அமைக்கலாம்.

ஆயிரக்கணக்கான ஸ்பிரிங்குகளையும் , இணைக்கும் போல்ட் , நட்டுகள், மற்றும் சிறு உதிரி பாகங்கள் இல்லாமல்  , வடிவமைப்பு நேர்த்தியின் இலக்கணமாக   P 3-1 டாப் ஆர்ம் விளங்குகிறது.

பயன் பாடு உத்திகள் 

இதில் காலப் போக்கில் ரப்பர் குழாய் தன விசையை இழந்து  கட்டையாய் மாறும் போது கவனித்து மாற்றுதல் முக்கியம். ledge  வளைந்து போதலாலும் விசை குறையலாம். புதிதாக மாற்றுதல் நலம். டாப் ஆர்ம் மற்றும் ஆர்ம் பார்களின் இணைப்பு போல்ட்டுகளை சரியாக வைத்தல், போன்ற எளிய உத்திகளாலேயே இந்த டாப் ஆரம் நன்கு வேலை செய்யும்.

புதிதாக காம்பேக்ட் ஸபின்னிங் உபகரணங்கள் மாற்றம் செய்த மெஷின்களில் (conversion ), முதல் உருளைக்கு 21 கிலோ வரை தேவைப்படும். அதனால் இந்த மெஷின்களில் புதிய ரப்பர் குழாய் மாற்றம் செய்து காற்றழுத்தம் அளக்கும் அதிகரித்துப் பார்க்கலாம். . அப்படியும் 21 கிலோ கிடைக்கவில்லை என்றால் , ஆர்ம் பார் பெண்டு இருந்தால் சரி செய்ய வேண்டும். இதிலும் கிடைக்கவில்லை என்றால் எளிய உபாயமாக Apex நிறுவனத்தின் load  enhancing spacer டாப் ஆர்மின் லீவரில் மேல் பொருத்தி காற்றின் விசையை அதிகரிக்காமலேயே எளிதாய் 4 கிலோ வரை விசை அதிகரிக்க செய்யலாம்.

20180212_161834

ஸபின்னிங் பிட்டர்கள் அனைவருக்கும் இந்த டாப் ஆரம் பற்றி விளக்கம் அளிக்கப் பட வேண்டும். உபரியாக சில டாப் ஆர்ம்கள் வைத்திருந்து பழுதானவற்றை நீக்கி அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி , பிரச்சினைகளை ஆராய்தல் நலம்.

ரப்பர் குழாய் பொத்தல் விழுந்து காற்று பீறிட்டால் பிரச்சினையே. இதை கண்டு பிடித்தல் சிரமமும் கூட. எந்நேரமும் டாப் ஆர்ம் லோடு அளக்கும் கருவி மில்லில் இருப்பது நலம். அதை குறிப்பிட்ட கால இடைவெளியில் கெலிப்ரேஷன் செய்து வைக்கவும் நூற்பு இயந்திர பிட்டர்களுக்கு அறிவுறுத்தப் பட வேண்டும்.
செய்யக் கூடாதவை 
1. எக்காலத்திலும் , P 3-1 டாப் ஆர்மை சாதாரண ஸ்பிரிங்கு விசைக்கு மாற்றும் தவறை நூற்பு வல்லுநர்கள் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் ஆரம் பார் வளைந்து கொடுக்கிறது. இந்த வளையும் விசையையே நாம் தவறாக டாப் ஆர்மின் விசை ஏறுகிறது என நினைக்கிறோம். இதனால் டாப் ஆர்ம் ஸ்டாண்டு வலுவிழந்து உடையும். டாப் ஆர்மை உயர்த்தியும் தாழ்த்தியும் இயக்க ஆட்கள் பெரும் சிரமப்  படுவார்கள். ஒரு கட்டத்தில் முழு டிராப்டிங் சேதமாகி , நல்ல மெஷினை ,  வேறு வழியின்றி   விற்க முடிவெடுக்கவும் நேரலாம்.
2. அதிக விட்டம் கொண்ட சிறு உலோக உருளையை (metal  bush ) உள்ளே போட்டு விசையை அதிகமாக்கிட ஒரு வழியை நூற்பு மில்கள் சிலர் செய்கின்றனர். இதில் நன்மையை விட தொந்தரவுகள் அதிகம். உருளையைத் தாங்கும் கம்பித் துளை லூஸாகி விட வாய்ப்பு, புதிய ரப்பர் குழாய் மாற்றுகையில் அழுத்துதல்  கடினமாகி விடுதல் போன்ற பிரச்சினைகள் வரலாம்.
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: